Thursday, October 29, 2009

இஸ்லாமும் மனிதாபிமானமும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்


ஆற்றல் அல்லாஹ்வுக்கே எந்த படைப்பினங்களுக்கும் இல்லை!


அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய்.நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய் நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 3:26


கையில் அனைத்து ஆட்சியதிகாரத்தையும் வைத்திருப்பவ(ன் அல்லாஹ்; அவ)னே அனைத்துப் பேறுகளுக்கும் உரிமையாளன். அவன் அனைத்தின் மீதும் பேராற்ற லுடையவன்" (அல் குர்ஆன் 67 :1).


ஆட்சி அதிகாரம் கொடுக்கும் உரிமை அல்லாஹ் ஒருவனுக்கே
இப்பூமியில் விரும்பிய இடத்தில் வசித்துக் கொள்ளும் வகையில் இவ்வாறே யூசுபுக்கு (ஆட்சி) அதிகாரம் அளித்தோம். நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின் கூலியை வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 12:55.
பொறுமையாளர்களுக்கு ஆட்சி உரியது – பயங்கரத்துக்கு அல்ல
அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி முடிவு இறைவனை அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும். அல்குர்ஆன் 7:128மேலும் நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்டு (அதனால் ஏற்பட்ட இன்னல்களில்) அவர்கள் பொறுமை காத்தபோது நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்தே ஏற்படுத்திக் கொடுத்தோம்" (திருக்குர்ஆன் 32:24).
இஸ்லாத்தின் எதிரியிடமும் நளினம் காட்டுங்கள்
“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் பயந்து நல்லுணர்ச்சி பெறலாம்” என்றும் கூறினோம். (அல்குர்அன் 20:43,44)

தன் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத அந்த மறுமை நாளில், ஏழு வகையினருக்கு அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிழல் தருவான். (அவர்களில் ஒருவர்) நீதிவழுவாத அரசன்" (புகாரி-6308; முஸ்லிம்-1712)

நீதியின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள் ..." (4:135).

 
நீங்கள் எல்லோரும் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள் ..." (3:103).

மக்களில் (நன்மை செய்யும் ) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரை அல்லாஹ் தடுக்காவிட்டால் உலகம் சீர் கெட்டுவிடும் ..." (2:251).


மனிதர்களின் அரசன் அல்லாஹ் ஒருவனே!" (114:2).அல்லாஹ்வி்ன பண்புகளும் திறமையும்
அல்லாஹூ லாஇலாஹ இல்லாஹூவல் ஹய்யுல் கய்யூம், லாதஃகுதுஹூ ஸினதுவ் வலா நவ்ம், லஹூ மாஃபிஸ்ஸமா வாத்தி வமாஃபில் அர்ழ், மன்தல்லதீ யஷ்ஃபவு இன்தஹூ இல்லா பிஇத்னிஹ், யஃலமு மாபய்ன அய்தீஹிம் வமா கல்ஃபஹூம் வலா யுஹீதூன பிஷையிம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹூஸ் ஸமாவாத்தி வல் அர்ழ வலா யஊதுஹூ ஹிஃப்ழுஹூமா வஹூவல் அலிய்யுல் அழீம்’ (திருக்குர்ஆன் 2:255)

விளக்கம்
அல்லாஹ் -
வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் நித்திய ஜீவனும் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவனும் ஆவான். தூக்கமும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை. வானங்களிலும் பூமியிலுனுள்ள அனைத்தும் அவனுடையவையே. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னாள் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின்னாள் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் அறிந்துக் கொள்ள முடியாது. அவனது அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. அவன் மிக உயர்ந்தவன். மகத்துவ மிக்கவன். (திருக்குர்ஆன் 2:255)

''ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் (புகாரி).


நபி (ஸல்) கூறினார்கள்:

“அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)


யூதர்களிடமும் பரிவு காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்):-
யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமு அலைக' என்றனர். (அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறாமல்) அவர்கள் கூறுவதை நான் விளங்கிக் கொண்டேன். "அலைக்கு முஸ்ஸாமு வல்லஃனது" (உங்களுக்கு அழிவும் சாபமும் ஏற்படட்டும்) என்று மறுமொழி கூறினேன். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! சற்று பொறு! எல்லா விஷயங்களிலும் அல்லாஹ் பண்பாட்டை (நளினத்தை) விரும்புகின்றான் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "வ அலைக்கும்" (உங்ளுக்கும் அவ்வாறே) என்று கூறிவிட்டேனே என்றார்கள். ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது!


ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரனுக்குக் கொடுமை புரிவதுமில்லை, அவனை ஆதரவின்றி விட்டு விடுவதுமில்லை. எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம்)நபி (ஸல்) கூறினார்கள்:
“அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)

மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துதல் நற்பண்புகளில் ஒன்றாகும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன். என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார். (ஆதாரம் புகாரி 2692)

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு 'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அல்லாஹ்வின் தூதரிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், 'நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்" என்று கூறினார்கள். . (ஆதாரம் புகாரி 2693)


கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுத்தல்
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
"ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுத்து) தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறில்லை" என்னும் (திருக்குர்ஆன் 04:128) திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது ஆயிஷா(ரலி), 'ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத வயோதிகம் முதலியவற்றைக் கண்டு அவளைப் பிரிந்து விட விரும்பும் நிலையில், அவள் 'என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக் கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்து விடு' என்று சொல்வதை இது குறிக்கும்" என்று கூறிவிட்டு, 'இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால் தவறேதுமில்லை" என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி 2694)


இருவருக்கிடையே உண்டாகும் சண்டை சச்சரவுகளை தீர்த்தல்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சத்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்" என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) புறப்பட்டு வந்து, 'நன்மை(யான செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?' என்று கேட்டார்கள். அந்த மனிதர், 'நானே இறைத்தூதர் அவர்களே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்" என்று கூறினார்.(ஆதாரம் புகாரி 2705)


கடன்பட்டவர் வருமை நிலையில் இருந்தால் கடனை தள்ளுபடி செய்தல்
கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
எனக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்ரத் அல் அஸ்லமீ(ரலி) சிறிது பணம் தர வேண்டியிருந்தது. எனவே, அவரை நான் சந்தித்து (கடனை அடைக்கச் சொல்லி) நச்சரித்தேன். (எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் குரல்கள் உயர்ந்தன. நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'கஅபே!" என்று கூறி 'பாதி' ('பாதி கடனைத் தள்ளுபடி செய்து விடு') என்பது போல் தம் கரத்தால் சைகை செய்தார்கள். அவ்வாறே பாதியைப் பெற்றுக் கொண்டு, பாதியைத் தள்ளுபடி செய்து விட்டேன். (ஆதாரம் புகாரி 2706)

நபிகளார் தன் நடைமுறையை ஒவ்வொருவரும் பின்பற்ற அறிவுறுத் தியுள்ளார்கள்
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.” (அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-631)


No comments: